லட்சிய பேய்

உங்கள் லட்சியம் உங்களை பேய் போல் துரத்தினால்
கனவிலும் உங்களை அதை நோக்கி நடக்க vaithal
ஆழ்ந்த தூக்கத்திலும் அலறி அடித்து ஓட முடிந்தால்
நீங்கள் யாரை பார்த்தாலும் லட்சிய பேய் இரத்தம் குடிக்க துடித்தால்
யாரிடம் பேசினாலும் அது உங்களுடன் பேசி கொண்டிருந்தால்
உலகமே உங்களை பைத்தியம் என்றாலும்
நீங்கள் அந்த பேயுடன் மட்டும் பேசி கொண்டிருந்தால்
அதன் கை பிடித்து நடந்து கொண்டிருந்தால்
நீங்கள் லட்சியத்தினை தூங்காமல் பார்த்து கொண்டால்
அது உங்களை தோற்காமல் பார்த்து கொள்ளும்
24 மணி நேரமும் உங்கள் சட்டை பையில் ஓர் பேனா இருந்தால்
உங்கள் மூளை உதிக்கும் முத்துகளை அதனால் எழுத முடிந்தால்
எழுதியதை 12 மணி நேரத்திற்குள் செய்ய முடிந்தால்
நீங்களே உங்களை சுய சோதனை செய்து கொண்டால்
உங்கள் லட்சியம் கொள்ளை அடிப்பதே ஆயினும்
உங்களுக்கு வெற்றி நிச்சயம்

எழுதியவர் : nagaxcd (2-Jun-15, 10:46 pm)
சேர்த்தது : nagaxcd
Tanglish : latchiya pei
பார்வை : 81

மேலே