கலைஞர் - வெற்றியை மணந்தவரே

குளித்தலை வென்ற
புலித்தலை நீ

தஞ்சாவூர் வென்ற
அஞ்சா தேர் நீ

சைதை வென்ற
வைகை நீ

அண்ணாநகர் வென்ற
அண்ணா நகல் நீ

சட்ட மேலவை சென்ற
சட்டமேதை நீ

துறைமுகம் வென்ற
பிறைமுகம் நீ

சேப்பாக்கம் வென்ற
கோப்பாக்கம் நீ

திருவாரூர் வென்ற
திருவாசகம் நீ

எழுதியவர் : குமார் (3-Jun-15, 6:02 pm)
பார்வை : 65

மேலே