என்றுமே இசைக்கும் ராஜா - இளைய ராஜா

எங்கள்
மூச்சுக்குள் நுழைந்து
முழுதும் நிறைந்தாய்
உன்
புல்லாங்குழல்
இசையில்...

எங்கள்
இதயத்து துடிப்பில்
தாளம் தட்டினாய்
உன்
மத்தளத்து
இசையில்...

எங்கள்
ஹார்மோனில் கலந்து
இசை தூண்டினாய்
உன்
ஆர்மோனிய
இசையில்...

எங்கள்
மனதினை இழுத்து
ஒட்டிக் கொண்டாய்
உன்
காந்தக்
குரலில்...

மெல்லிசை கலந்த
துள்ளிசை
கொடுத்தாய்...

தெம்மாங்கு கலந்த
தெள்ளிசை
கொடுத்தாய்...

உன்னிசை இல்லா
இன்னிசை இல்லை...

இசைக்கும்
ராஜா
என்றுமே நீ தான்
இசைக்கு ராஜா...

எழுதியவர் : சகா (சலீம் கான்) (5-Jun-15, 5:41 pm)
பார்வை : 331

மேலே