சோகத்தின் சுகம்

காலம் முழுதும் சேர்ந்திருப்பேன்,
உன் நிழலாக
நீ இமை மூடும் வரை காத்திருப்பேன்,
உன் கண்களாக
நீ சுவாசிக்கும் காற்றில் கலந்திருப்பேன்,
ஒரு அணுவாக
நீ உறங்கினாலும் விழித்திருப்பேன்,
உன் கனவாக
நீ என்னை நேசிக்கும் வரை நின்றிபேன்
உன் இதயமாக
உன் வாசத்துடன் இணைந்திருப்பேன்,
ஒரு மலராக
நீ என்னை வெறுத்தாலும் வாழ்ந்திருப்பேன்,
ஒரு பிண'மாய் கல்லறையில்!