நான் வாங்கிய ரோசாப்பூ

வாசமில்லா பூ வாங்கி நேசமோடு நான் கொடுத்தேன், என் சங்கீத முல்லைக்கு!
ரோசாப்பூ வாங்கி தந்த நேரம், ராசாத்திபோக துணிந்து விட்டாள் சுடுகாட்டுக்கு!?
ஆசயாய் வாங்கி வந்தேன், அவளுக்கு பிடித்த வண்ண ரோசா!

வாங்கி வந்த ரோசாப்பூ பூங்குழலில் சூடுவதற்குள் அரச்சி குடித்து விட்டாள், அரளி விதையை!
அந்தவிதை என்ன, ஊட்டச்சத்து என்று நினைத்தாளோ?



கட்டிய கூந்தல் களையல, வாங்கிய பூவும் வாடல,

ஆனால்
வெட்டுண்ட மீனைப் போல் கிடந்தாள்!
கட்டிளம் காளை அவள் பூவுடலை கண்டவுடன் வாடி விட்டேன்!

அனலிடைப்பட்ட விரல்போல ஆகி விட்டேன்!

அவளோ,
முதலுதவிக்கு பின் சிரித்துக் கொண்டிருந்தாள்!

அன்று மூச்சு நின்றும் உயிர் இருந்தது, அவள் முகத்தை கண்டதனால்!

இன்று மூச்சிருந்தும் உயிர் இல்லை அவளைப் பிரிந்ததனால்!!!!!!!..........

எழுதியவர் : தமிழ் பிரியன் சிவா (8-Jun-15, 11:47 am)
சேர்த்தது : நமச்சிவாயம்
பார்வை : 304

மேலே