இன்வசந்தம் வந்ததே இன்று - இரு விகற்ப நேரிசை வெண்பாக்கள்

பறவைகள் சன்னலைச் சுற்றியே பாடிப்
பறக்கவே, காய்ந்த இலைகள் - வறண்டு
படபடத்து மௌனமாய் வீழவே என்னுள்
தடதடக்கும் உந்தன் முகம்! 1

என்னுள் பளிச்சிடும் உந்தன் முகமுமே;
என்னிதயம் ஏங்கும் உனக்காக - என்னைத்தான்
பல்லாண்டு பல்லாண்டு பண்போடு எந்நாளும்
கல்லாக்கா மல்காக்கு மே! 2

மேகங்கள் சாந்தமான வானில் உலாவுமே
தாகமுடன் விண்ணில் தவழ்ந்தபடி - வேகமாய்க்
காற்றுமே வீச உனதுபாத காலடிகள்
தோற்றுப்பின் வாங்கும் துணிந்து! 3

காலடிகள் தோற்றுப்பின் வாங்கும் துணிவாக;
மேலுமே கண்ணீர் உலர்ந்துவிடும் - காலமும்
தாங்காதே என்துயர்; என்றும் உனதுகாதல்
பாங்காய் அறிவேன் மகிழ்ந்து! 4

கருணைக் கொடையின் விதையொன்று நீ,தா
அரிதாய்த் தவிக்கும் இதய - மருகில்
விதைப்பேன்; தெளிமையான கண்ணீர் தெளித்தே
புதிதாகக் காண்போம் தெளிவு! 5

பகலவன் தெள்ளிய வெள்ளிச் சிரிப்பை
இக(ல்)இருள் மேகம் கிழித்து -பகபக
என்றே உதிர்க்க பறவைகள் பேசின
இன்வசந்தம் வந்ததே இன்று! 6

Kate Zhu என்பவர் எழுதிய An Abandoned child என்ற sonnet வகையில் அமைந்த ஆங்கிலக் கவிதையை வெண்பாக்களாக ஆக்கியிருக்கிறேன்.

Birds roam around my window singing songs,
Dead leaves flutter and fall with a moan;
Your face flashes through my mind, my heart longs
For you that save me from being a stone.

Clouds wander in the somber sky,
Wind chimes echo mournful dirges in the air;
As your footsteps recede, my tears dry.
Leaving your love, I can no longer bear.

Please give me a seed out of charity,
And let me sow it in my desolate heart.
Please shed transparent tears for clarity,
And allow me cleanse for a brilliant start.

The sunshine smiles breaking through a dark cloud,
Birds chat that spring is coming as the crowd!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Jun-15, 12:32 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 96

மேலே