சிறு துளிகள்

உன் குரலை உயர்த்தி பேசாதே
உன் பலவீனம் புரிந்து விடும்
அமைதியாய் இருந்து விடு
உன்னை யாராலும் புரிந்திட முடியாது
...................................
நம்பிக்கை வைத்து விடு
உன்னை நம்பியவர் மேல்
நம்ப நடந்து கொள்
உன் மேல் நம்பிக்கை கொள்ள
..................................
அன்பைக் கொடுத்து விடு
அனைவரும் உன் வசம்
அன்பு ஒன்றே போதும்
அனைத்தும் அடங்கும் அதனுள்
.....................................
கோபத்தைக் குறைத்துக் கொள்
பாவங்கள் சேராது உன்னை
கோபம் சாபத்தின் முதலிடம்
ஆத்திரம் கோபத்தின் தூண்டில்
...................................
மானம் பெரிதெனக் கொள்
மரியாதை உனதாகும் ஏற்றுக் கொள்
மானம் தன்மானம் வாழ்வில்
மனிதனின் கவசங்களாகும்,

எழுதியவர் : பாத்திமா மலர் (11-Jun-15, 9:00 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : siru thulikal
பார்வை : 279

மேலே