பொள்ளாச்சி அபி சிறுகதைகள் திறனாய்வு போட்டி - அவள் அப்படித்தான்

கதையின் கடைசி காட்சியை முதலில் கொண்டு தொடங்குவதன் மூலம் வாசகனுக்கு ஒரு ஆச்சரியத்தை அளித்து இறுதிவரை என்ன நடக்குமோ என்று சிந்திக்க தூண்டுகிறார் கதாசிரியரான திரு.பொள்ளாச்சி அபி அவர்கள்....

பின் அங்கிருந்து கதை மெதுமெதுவாக பின்னோக்கி பயணிக்கிறது.

மனிதனுடனான ஆட்டின் உறவை அழகாய் ஒரு பத்தியில் வர்ணித்துள்ள கதாசிரியர், எவ்வளவு நன்றாக பழகினாலும் கடைசியில் மனிதன் தன் புத்தியை காட்டாமல் விடமாட்டான் என்பதை நாசுக்காக விளக்குகிறார்.

ஒரு கறிக்கடையில் ஆடு வெட்டப்படும் போது நடக்கும் அத்தனை நிகழ்வுகளையும் நாமே அங்கே நின்று பார்ப்பது போல விளக்குகிறார்.

தன்னைவிட்டுப் பிரிந்த மகனுக்கு கொடுக்கும் தண்டனையாக, தனக்கு கொள்ளி வைக்கும் உரிமை கூட கொடுக்க நினைக்காததாலோ என்னவோ, தனது உடம்பின் அனைத்து பாகங்களையும் வேண்டுவோருக்கும் கொடுத்து உதவும் படி எழுதி வைப்பதன் மூலம் நமக்கும் சிந்தனையை ஊட்டுகிறார்.

கதையின் போக்கினூடே சமுதாய விழிப்புணர்ச்சி சிந்தனைகளை அள்ளித்தெளிக்கிறார். அதில் ஒன்று தான் கறிக்கடைக்கு வருபவர்கள் சொந்தமாக பை கொண்டு வருவதன் மூலம் பாலீத்தின் ஒழிப்பை அறிவுறுத்துகிறார்.

பிரைவேட் பஸ்கண்டக்டரை ஒரு ரூபாய்க்காக திட்டும் ஆத்தாவை காட்டியும், தராசை சரியாக பிடிக்காத காய்கறி கடைக்காரரை திட்டும் ஆத்தாவை காட்டியும், பின் தனக்காக உழைப்பவருக்கு உதவி செய்பவராகவும், தனக்கு மிஞ்சும் போது அதனை இலவசமாக அளிப்பதன் மூலமும் பல மனிதர்களின் குண நலன்களை விளக்கிச்செல்கிறார்.

கதையை முடிக்கும் போது ஒரு பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தி கண்களை குளமாக்குகிறார்.

அவள் அப்படித்தான் = இந்த சிறுகதையை முதல் முதலாக படித்த போது அப்படியே நெஞ்சில் ஒட்டிக்கொண்டது.

இதற்கு விமர்சனம் எழுத வாய்ப்பளித்த திரு.பொள்ளாச்சி அபி வாசகர் குழுவிற்கு மிகவும் நன்றி...

இது ஒரு கதையல்ல.... வாழ்க்கை...

====அ.வேளாங்கண்ணி


இது என் சொந்த படைப்பே என்பதை உறுதியளிக்கிறேன்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (14-Jun-15, 11:58 pm)
பார்வை : 133

மேலே