ஏழையின் வண்ணம்
புதிதாய்
குடியேறிய வீடு
அவ்வளவாய் அழகில்லை
எவ்வளவாகும் தெரியவில்லை
வண்ணம் பூச
நீல நிறம் பூசலாம்
முடிவு எடுத்தாகிவிட்டது
முடிப்புகள் ஏதும் உண்டா
கடைத்தெரு போய்
வண்ணம் வாங்க
வாசல் வந்த
அந்த வீட்டு
குட்டி வசந்தம்
வானம் அண்ணாந்து பாத்து
சில குடங்கள்
நீல வண்ணம் கடன் கேட்டது