தேடும் உருவம்

நிழலோடு பேசும் வார்த்தை
நினைவோடு வாழும் ஜீவன்
சேருமா? சேருமா?

பேசாத ராகமெல்லாம் பாட்டாக ஆகாதம்மா
சொல்லாத காதலெல்லாம் ஒன்றாக சேராதம்மா
உன்னை தான் தேடுகின்ற ஜீவன் நானம்மா

வானத்து நிலவுவந்து என்னோடு பேசாதா?
வைகறை காற்றுவந்து என்னோடு மோதாதா?
நிலவின்றி வானா? - அடி
நீயின்றி நானா?
நீரின்றி மீனா? - உன்
நினைவின்றி நானா?

கண்ணோடு காண்பதெல்லாம்
கனவுக்குள் தேடினேனே
கண்ணீரில் சொல்லெடுத்து
காற்றோடு பாடினேனே
நீ தானே இன்றும் என்றும் சுவாசம் தான்

வழிதேடும் ஒரு பறவை உறவோடு சேராதா?
நடமாடும் மயிலிறகு நெஞ்சோடு தூங்காதா?
கண்ணே உன் காதல் - என்
கண்ணீரில் தானா

காலங்கள் யாவும் - நான்
காய்கின்ற மானா?
போகாத பாதையெல்லாம்
உன்னைத்தான் தேடினேனே

நினைக்கின்ற நிமிடமெல்லாம்
தீயோடு மூழ்கினேனே
நீ தானே நாளும் தேடும் உருவம் தான்.

எழுதியவர் : உடுவையூர் தர்ஷன் (12-May-11, 4:08 am)
பார்வை : 403

மேலே