நிழல்

நீல வானிலே
நீந்திடும் நிலவே- உன்
நிழலிலே நான்
நித்தமும் நீந்துகின்றேன்

என் நிழலுக்கும்
உயிர் உண்டு
ஏனெனில்
தினமும் அது
உன் பெயரை அல்லவா
உச்சரிக்கின்றது.

விஞ்ஞானத்தின்
ஒளியின் கோட்பாட்டைக் கூட
நீ மாற்றிவிட்டாய்
உன் பார்வைகளால்....

ஏனெனில்
நான் உனக்குபின்னால்
நின்றாலும் நீ
என்னைப் புரிந்துவிடுகிறாய்
அல்லவா....

இதயமே!
இந்த ஜென்மத்தின்-என்
மரணம் உன்னோடு தான்
இருக்குமடி.

இனியொரு ஜென்மமிருந்தால்-என்
ஜனனம் உனக்காகத்தான்
இருக்குமடி.

எழுதியவர் : உடுவையூர் தர்ஷன் (12-May-11, 4:09 am)
Tanglish : nizhal
பார்வை : 299

மேலே