காற்றில் வரைந்த ஓவியம்

வானவில்லின் வண்ணம் தொட்டு
ஓவியம் வரைந்தேன்,
அது காணமல்
கானகம் எல்லாம் தேடி திரிந்தேன் ...!!

கானல் நீரில் தாகம் தணிக்க
தவித்து விரைந்தேன்,
அதை தொட இயலாமல்
துரத்தி துரத்தி வெம்பி அழுதேன் ...!!

வாடாது என எண்ணி
காகித பூ தொடுத்தேன் ,
அதுவும் என்னை விட்டு காற்றில்
பறக்க புழுவாய் துடித்தேன் ....!!

நிஜத்தில் கிடைக்கா வாழ்வை
கனவில் தேட நினைத்தேன் ,
பாவி கண் இமை மூடாமல்
கனவையும் துலைத்தேன்...!!

அதிர்ஷ்ட வசமாய் பிறக்கும்
போது இறந்தே பிறந்தேன் ,
துறதிஷ்டம் கூடவே பிறக்க
கண் விழித்து இறப்பை நோக்கி அலைகிறேன் ...!!

ஏமாற்றங்களும் தோல்விகளும்
என்னை தாலாட்ட ..சீராட்ட
இதழால் பேச இயலாமல் பல பொழுது
இமையின் கண்ணீரால் பேசுகிறேன் ...!!

முடிவு என்ற ஒன்று
இன்றே வருமாயின்
இன்பத்தின் விளிம்பில் துடிப்பேன் ...
மீண்டும் தொடக்கம்
இருக்குமாயின்
பிறப்பேன் ...
கல் இல்லா.. மண் இல்லா ...
ஆள் இல்லா ...மனம் இல்லா ...
மரம் இல்லா ....மலை இல்லா...
ஓர் புதிய உலகத்தில் ,யாரும் இல்லா
நான் மட்டும் தனியாய்

என்றும் ...என்றென்றும் ...
ஜீவன்

எழுதியவர் : ஜீவன் (18-Jun-15, 5:26 am)
பார்வை : 106

மேலே