விவசாயம் - இன்று

விதையோடு
விஷம் போட்டு
வளர்ப்பதாலோ
என்னவோ
விவசாய பொருட்களின்
விலைவாசியும்
விஷம் போலே
ஏறுதய்யா .

பூச்சிக் கொல்லி
போடாத காய்கறியெல்லாம்
கண்காட்சிப்
பொருளாய் மாறுதய்யா.

வயல் வெளிகள்
நீரன்றி வறண்டு போச்சு
அத்தனையும் வீடு கட்ட
தனி பிளாட்டா மாறிப்போச்சு !!

எழுதியவர் : லாரன்ஸ் (18-Jun-15, 7:56 am)
சேர்த்தது : a.lawrence
பார்வை : 88

மேலே