18-06-2015 வருந்துகின்றேன் -நீர்ப்போராட்டம்

நீரோடும் மின்சாரம் நிலையாகக் கிடைக்க வேண்டித்
***தாரோடும் வெயில்நின்று தவிப்பெடுத்துக் காட்டி னோர்க்குச்
போராடித் தவிப்பவரைப் புரிந்தவர்தான் என்ப தைப்போல்,
***புழுக்கத்தை வெப்பத்தைப் போக்கிடவே இதுசெய் வாரோ ?
நீரூற்றைப் பாய்ச்சுகிறார்! நல்லதொரு குளியல் தந்து
***நேரடியாய்ச் செயல்பட்டே நெஞ்சினையும் குளிர்வித் தாரோ?
சீரான மின்சாரம் சேர்த்தெடுத்துப் பாய்ச்சி டாமல்
***சிந்தையிலே கருணைமிகக் கொண்டவர்கள் செய்கை ஈதோ?
====== =========