இனிப்பு எடுத்து கொள்ளுங்கள் எழுத்து.காமின் புதிய சேவைக்கு

இனிப்பு எடுத்து கொள்ளுங்கள்
எழுத்து.காமின் புதிய சேவைக்கு
"தனிப்பட்ட விடுகை அனுப்பி "
தாமதமாய் நன்றி சொல்கிறோம்

எண்ணென்ப ஏனைய எழுத்து.காம் என்ப
இதற்க்காகதான் இணையம் காண்க என்றாகி
இத்துனை கவிதைகள் வளர்த்ததனால்
இனி நீயும் ஆல விருட்ச்சம்தான் என்போம்

குயில்கள் மட்டுமா உன்னில் குடியேறுகிறது
கொஞ்சும் தமிழ் கவிதைகளுக்காக
கோடி கோடியாய் குரல்களும் இசைபாடுகிறது
குயில்களாக கவிஞர்களும் குரல்களாக இரசிகர்களும்

கற்பனைக்கு வருவதெல்லாம் கவிதையே
கணிப்பொறியில் நுழையும்போதே
ஏதோ ஒரு குறையிருப்பின் திருத்திக்கொள்ள
இப்படி ஒரு வசதிதான் உடனுக்குடனே

எல்லோருக்கும் நன்மை பயக்கும்
இதனாலே சுவை கூடும் கவிதைக்கு
ஒரு சிலரின் தெளிவுரைக்கு விண்ணப்பிக்க
உன் வடிவில் கிடைத்ததிந்த பாக்கியம்

தயவு செய்து இந்த வாய்ப்பை தவறாக
தங்களது சுயநலத்திற்கு பயன்படுத்தாதீர்
தமிழ் நெஞ்சங்களே கேட்டு கொள்கிறோம்
தலை வணங்கி உங்களிடமே நாங்கள்

கவிஞர்களுக்கும் கவிஞர்களுக்கும் உறவுமாய்
கவிஞர்களுக்கும் இரசிகர்களுக்கும் உரிமையுமாய்
கவிஞர்களுக்கும் இரசிகர்களுக்கும் எழுத்துக்குமாய்
காலம் காலம் தொடர்பினை நல்கியதால்

இது போன்ற புது புது சேவைகளை
எழுத்திர்க்கு அர்பணித்த குழு முயற்சிக்கு
எந்நேரம் விழித்திருக்கும் காலம் போலே
எப்படித்தான் வரலாறில் நன்றி சொல்ல ?

எழுதியவர் : . ' .கவி (12-May-11, 10:03 am)
பார்வை : 503

மேலே