உன்னையும் உன் நினைவுகளையும்...
ஒட்டி நின்று
உறவாடிய நீ
என்னை விட்டு
எட்டி போனது நான்
எதிர்பாராததே
என்றாலும்...
என்
இதயத்தை
ரணமாக்கி,
நம் காதலை
கனவாக்கி,
நீ என்னை
தூர எறிந்துவிட்டு
போயிருந்தாலும்...
உன்னை நேசித்த
இதயத்தில் இருந்து,
உன்னையும்
உன் நினைவுகளையும்
தூக்கி எறிய முடியவில்லை.
இன்னும் என்னால்...