கவை
நான் நானாக இருந்தேன்
நீ நீயாக இருந்தாய்
ஒரு கட்டத்தில்,
காலத்தின் திட்டத்தில்,
காதலின் சட்டத்தில்
நீயும் நானும் நாமானோம்;
நம்மில்,
நான் என்னை தேடினேன்;
நீ உன்னை தேடினாய்..
இறுதிவரை
நான் உன்னையோ,
நீ என்னையோ
தேடவேயில்லை..
வாழ்க காதல்.