அரபு நாட்டு கருப்பு நிலா

உடைசிறையில் உருத்தெரியாமல்
ஒளிந்திருக்கும் மலரே!

தடைக்கல்லினை தாண்டமுடியாமல்
தத்தளிக்கும் தளிரே!

உலகமே தெரியுது உனக்கு
உன்னை தெரியவில்லை எனக்கு

கலக்கமானான் பகலவன்
கருமேக்த்துள் நிலவு கண்டு

கனப்பொழுது இறங்கி வந்தான் பூமிக்கு
மேகத்தை விலக்கி பார்க்க!

இனம் தாவும் வண்டினை வஞ்சிக்காமல்
மனம் மேவும் மலருக்கு சிறையா!

இங்கே கவிஞரே இல்லையாம் - காரணம்
கவிஞனின் கருவூலத்தையே கருப்பாடைக்குள்
அல்லவா அடைத்திருக்கிறார்கள்!

இருட்டுதிரையில் திருட்டுப் பார்வை பார்பவளே
உலகுக்கு உன் நிறம் கருப்பா!

ஏ வானமே நீயும் ஒரு அரபு மனிதனா !
அந்த நிலவுப் பெண்ணை ஏன்
கார்முகிலால் மறைக்கப் பார்க்கிறாய்!

எழுதியவர் : கவிஞர் தமிழாணவ அலெக்சாண் (20-Jun-15, 2:09 pm)
பார்வை : 315

மேலே