அகம்பாவம் தெரியுமா

அகம்"பாவம்" தெரியுமா
=====================

சும்மா இரு மாமா
என்ற உன் ஒற்றைச்சொல்தான்
எல்லை மீறச்செய்கிறது
சற்றுமுன்னால்
குளித்துமுடித்த கூந்தலில்
சிறையாகிப்போகிறேனே மா
அகம்பாவி எனது அகம்"பாவம்" தெரியுமா

காப்பிக் கொடுக்குங்கைய்யை இழுத்து
முத்தம் கொடுக்கலாம் என்று
சிரமித்தால்
பல்லு விளக்காதவனின்
முத்தம் ஒன்றும் வேண்டாம்
மாட்டேன் என்ற
உன் சிரித்த பிடிவாதங்களுக்குள்
என் அசூயைகள் அடைப்பட்டுப் போகும்
அந்த ஒத்துத் தீர்ப்பு நேரம்வரை

அடி இவளே
பல்லுவிளக்காமல் தருகின்ற
முத்தத்தில் தான்
உருகிக் கரைந்த
கோக்கோ மிட்டாயின் காகிதத்தில்
எறும்புகளும் பாக்டீரியாக்களும்
ஊர்ந்திருப்பதைப் போல
ஊர்கோலஞ் செய்யலாமே

நீ என்னோடு இருக்கின்றபோது
என் அறையையும் என் கட்டிலையும்
இத்தனை பெரிதாக்கிய
விஷயத்தில் மட்டும்
என் இஷ்ட்ட தெய்வங்களுடன்
கோபந்தான் எனக்கு ம்ம்ம்

அந்த களிப்பின் முடிவுக்குப் பின்னால்
அதிகமாக்குகிறது
எங்களுக்கிடையேயான
இடைவெளியை அவை
வா உன் அணைப்பினால்
எல்லாவற்றையும் மீண்டும் சிறிதாக்கு ம்ம்ம்

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (22-Jun-15, 8:25 am)
பார்வை : 123

மேலே