நட்பின் பிரிவு
வாழ்கையொர் வட்ட
திரையரங்கம்_அதில்
சில கதாபாத்திரங்கள்_என்னோடு
பயணமாகின்றன
இறுதிவரையிலும்!
ஒருசில கதாபாத்திரங்கள்
இடையில் சந்தோசமாக_என்னுள்
வருகின்றன முகவரியின்றி_என்னைவிட்டு
அவை கண்ணீரோடு செல்கின்றன_இனி
அவை என்னோடு இயங்கபோவதில்லையாம்_இனி
அவை என்னை ரசிக்கபோகின்றனவாம்
இறுதிவரையிலும்!