விரைவில் மாறும் சாக்கடை கங்கையாக - உதயா

ஆள் நடமாட்டமில்லா
அடர்ந்த வனத்தில்
ரவிக்கையில்லா ராக்காயின்
மார்பில் வழியும் பாலினை
முகம் முழுவதும் பூசிக்கொண்ட
அந்த அம்மனக்காரனின் முகத்தை
துடைத்தபடியே ராக்காயியும்
நேற்று பிறந்த ஆட்டுக்குட்டிக்கு
அவ்வப்போது பாலூட்டியபடியே
வெறும் கோமணம் மட்டுமே
கட்டியிருந்த அந்த கருப்பனும்
தினந்தோறும் ஆடுகளை
மேய்த்துக் கொண்டு தான்
வீடு திரும்புகின்றனர்
ரவிக்கையின்றி வெறும் இலைகளை
மட்டுமே இடுப்பில் அணிந்து
அவள் கணவனுக்கு மட்டுமே அவளும்
அவன் மனைவிக்கு மட்டுமே அவனும்
காமப்பூக்களாய் காட்சியாகி
இன்றுவரை ஒரு கூட்டம்
பல மலைகளில் வாழ்ந்து கொண்டு தான்
இருக்கிறது
ரவிக்கை அணிந்து அதற்கு மேல்
புடவையை அணிந்தும்
எப்போது காற்றடிக்கும்
எப்போது புடவை விலகும் என்றே
ஒரு கூட்டம் நாகரீகத்திற்குள்
வளர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறது
ஆன்றோரும் சான்றோரும்
பெண்களின் ஆடை தான்
கலாசாரத்தை கெடுக்கிறது
பாலியல் கொடுமைக்கும் பெண்களின்
ஆடையே காரணம் என்று
வெக்கமில்லாமல் அவர்களும்
ஒரு எச்சையாகா
விளக்கமளிக்கின்றனர் ..
த்தூ ...
பெண்களே
உன்னவனை தவிர
வேறொருவன் உன்னை
காமமெனும் மோகத்தால் தீண்டினால்
அக்கணமே அவனை எரித்துவிடு
அப்பட்டியலில் உன்னவனை தவிர
உலகமே இருந்தாலும் சரி
தயங்காமல் எரித்துவிடு
உன்னவன் மட்டும் உனக்கு
உலகமாக இருக்கட்டும்
இது ஆடவனுக்கு எச்சரிக்கை அல்ல
விரைவில் நிறைவேற இருக்கும் கட்டளை
ஆடவனே உணர்ந்தால் வாழ்வாழ் நிலைத்துநின்று மண்ணில்
மறுத்தால் சாம்பலாய் கரைந்து வாழ்வாழ் சாக்கடையில்
கங்கை ஆறே உனக்கு
இனி மண்ணில் பணி இல்லை
கரைந்து போ பறந்து போ
விரைவில் சாக்கடை
கங்கையாக மாற உள்ளது