நிலாச் சோறு

நிலவு முகம் காட்டி சோறு ஊட்டிய நினைவுகள்
அன்றைய நிலவில் பாட்டி ஓன்று அரிசி புடைப்பதுபோல்
ஏமாற்றும் கதைகள் சொல்லி குழந்தைகளுக்கு சோறு ஊட்டுவது
முற்றத்தில் பாய் விரித்து உணவுதனைப் பகிர்ந்து
பாசத்துடன் பரிமாறும் அன்னை முகம் நிலவின் முகம்
இன்று மட்டும் குழந்தைகளால் காண முடிவதில்லை
நிலவு அன்று போல் இன்றும் தயங்காமல் தன் தண்ணொளி
தர மறுப்பதில்லை
நாம் அதை அனுபவிக்க கொடுத்து வைக்கவில்லை
நிலாச் சோறு சாப்பிட குழந்தைகளுக்கு ஆசை இருக்கு
ஆனால் நாம் வசிக்கும் இடத்தில் எல்லாம்
நிலாச் சோறு உண்பதற்கு முற்றம் இல்லையே
தெரு நாய்களைக் காட்டி
பூக்களையும் மரங்களையும் பூச்சாண்டிகளையும் காட்டி
இரவில் சோறு ஊட்டுகிறோம்,
நிலவு வெளிச்சம் தெரிகிறது
அதை அனுபவிக்க முடியவில்லையே
நாம் அனுபவித்தோம் அன்று இன்று நம் குழந்தைகள்
நிலாச் சோறு என்றால் என்ன என்று கேட்கும் அளவுக்கு
காலமும் சூழலும் எல்லாம் மாற்றி விட்டது
நிலவின் ஒளியில் சோறு உண்ணும்
அந்த சுகம் சொர்க்கம் தான்
நிலாச் சோறு உண்ணும் காலம் இனி எங்கே
நம் குழந்தைகள் அனுபவிக்க முடியவில்லையே

எழுதியவர் : பாத்திமா மலர் (23-Jun-15, 1:40 pm)
பார்வை : 155

மேலே