அவள்
அவளை எனக்கு நன்றாக
தெரியும்!
அவளை உங்களுக்கும் தெரிய
வாய்பிருக்கிறது!
ஒருவாரத்திற்கு நெத்திக்கு
நேர்ந்து விடப்பட்டு
கண்ணாடியில் காயும்
ஸ்டிக்கர் பொட்டு!
ஆடி தள்ளுபடியில்
கடைசிவரை காத்திருந்து
கண்ணீர்கண்ட சேலை
நகர்புற பேருந்துகளில்
பற்பல தோழ்கள்
உரச பயணிப்பவள்
இவளை எனக்கு நன்றாக
தெரியும்!
இவளை உங்களுக்கும் தெரிய
வாய்பிருக்கிறது!
மருந்து கடைகளில்
கம்பியுட்டர் செண்டர்களில்
பேருந்து நிலையங்களில்
அரசு அலுவலங்களில்
எதையோ தேடிகொண்டிருப்பாள்
அவளை எனக்கு நன்றாக
தெரியும்!
அவளை உங்களுக்கும் தெரிய
வாய்பிருக்கிறது!