கவி ருது வான போது
இலக்கியத்துக்கான மிக உயரிய விருது
எனக்கு வழங்கப்பட்ட இரவில்
பெய்த மழை
நிற்கவே இல்லை
முழு உலகமும் அழிந்து
அப்போதுதான் உருவாகின
இன்றைய பெருங்கடல்கள்
நோவாவின் தெப்பக்கட்டையில்
ஏறித் தப்பிய என்னிடம்
இப்போது சான்றுகள் இல்லை
கனவா நனவா என்றென்னை
எல்லோரும் கிள்ளிப் பார்த்த
தழும்புகள் மட்டும் இன்னும் உள்ளன