காதல் வலி இதுவோ

இரவா இது இரவா
விழியில் அவள் வரவா
இமைகள் துயிலா வேளையில்
ஒரு குயிலின் ஓசை கேட்குதே
யாரும் இல்லா வேளையில் துவர்
நீரும் விழியில் ஊற்றுதே மன
காகிதத்தில் எழுதி வைத்த
கவிதை ஒன்று எரியுதே............
மனகாகிதத்தில் எழுதிவைத்த
என் கவிதை ஒன்று எரியுதே.........
அது காதல் காதல் என்று
சொல்லி இதய கூட்டை குடையுதே............
இரவா இது இரவா
விழியில் அவள் வரவா........

கடலே கடலே
உனது கரையில்
கரைந்து கிடந்தேன் அவளுடன்
அவள் பாதச்சுவட்டை பாதை
என்றே பயணம் செய்தேன் திமிருடன்
கொடிய வனத்தில் தள்ளினாள் ஒரு
கொடியை வளர்த்து கிள்ளினாள்
என் உயிரின் நதியை வடிய வடிய
பாத்திரத்தில் அள்ளினாள்.......
அவள் விழி பார்த்து பார்த்து
அள்ளினாள்

உலகே வேகம் போகும் போது
எனது கால்கள் நோகுதே
நிலவு என்னும் பெரிய பந்தோ
உனது முகமாய் தோன்றுதே
விழித்தாலும் களைத்தாலும்
உனது நினைவோ தொடருதே
வசந்தம் தேடி போனவள்
வசைகள் பாடி போனவள் நீ
இருந்தாலும் மறந்தாலும்
எனது காதல் உண்மையே இனி
நீ போகும் வழி சாகும் வரை
நெருங்கமாட்டேன் பெண்மையே
இரவா இது இரவா
விழியில் அவள் வரவா

எழுதியவர் : கவியரசன் (25-Jun-15, 10:29 pm)
பார்வை : 56

மேலே