தங்கமே கவிதை
*
வாழ்க்கை முரண்களுக்கு எதிராகப்
பிறந்தக் குழந்தைக்குப் பெயர் வைத்து
அழகு பார்ப்பதில் தான்
எத்தனைச் சந்தோஷம்?
வறுமையில் வாடினாலும்
வஞ்சனையில்லாமல்
எத்தனையோ
ஆசைக் கனவுகளோடு
உனக்கு தங்கம் என்று
பெயர் வைத்திருக்கிறார்கள்
உன் பெற்றோர்கள்.
அழகு படுத்தி ஜொலிப்பதற்கு
உன் மேனியில் துளித்
தங்கமி்ல்லை.
உன் அங்கத்தினை
அலங்கரிக்கத் தங்கம்
இல்லாவிட்டால் என்ன?
என்னையே நீ
அங்கமாக்கிடும்போது
தங்கமே
நீதானே என் அசல்
சொக்கத் தங்கம்….!!.
*