கனா கண்டேனடி தோழி

கனா கண்டேனடி தோழி...
என் அருகில் நீ இருப்பது போல்!
கைகளை கிடக்கையில் நகர்த்தி
தேடினேன் உன்னை...

கை ஸ்பரிசித்துவிட்டது உனை!
இது கனவல்ல
நிஜம் என்று
புலம்ப நேரம்
தேவைப்படவில்லை!

உன் கையை அணைத்த
மாத்திரத்திலேயே
அறிந்துகொண்டேன்
இது நிஜம் என்று...

உன்னிடம் சண்டை போட்ட
சில மணி நேரங்களில்
என் அருகில் நீ!
நினைத்த உடன்
கண்களின் ஓரம் கண்ணீர்
நெஞ்சம் முழுக்க ஆனந்தம்
உன்னை அப்படியே
தூக்கி வாரி அணைத்து
மடியில் கிடத்தி
"என்னை மன்னித்து விடு
மன்னித்து விடு "
என்று மனதார அழ ஆசைப்பட்டேன்!

உன் தூக்கம்
களைந்து விடுமே
என்றெண்ணி
என் மூச்சு காற்றின்
சத்தத்தையும் நிறுத்திவைத்தேன்

இருவருக்கும்
இடையிலான
இடைவெளியை
இருகசெய்து
உன் தலையை
வருடிக்கொண்டிருந்தேன்!


இன்னொரு கையால்
உன் கையை
பிடித்துக்கொண்டு !
மனதிற்குள்ளேயே
மன்னித்து விடு ...
மன்னித்து விடு ....
என்று கூறிக்கொண்டிருந்தேன்...

நீ தூங்கிக்கொண்டிருப்பதை
நான் கண் சிமிட்டாமல்
பார்த்துக்கொண்டிருந்தேன்

நீ விழித்து எழுந்ததும்
என்னை பார்த்து
தூங்க வில்லையா!
என்று கேட்ட நொடி
அன்னையை உன்
உருவில் கண்டேனடி...

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (30-Jun-15, 8:14 pm)
பார்வை : 206

மேலே