காத்திரு

காத்திரு…!!
*
மாலை நேரம் நெருங்குது
மனசு அலை பாயுது
எங்கே இருக்கேன்னு
கண்கள் தேடி அலையுது.
*
வெளுத்த மேகம் கருக்குது
மழை வரும்போல தெரியுது
எங்கே இருக்கேன்னு
ஏக்கமாக இருக்குது
*
அனல் தனிஞ்சி வருது
ஆடி காத்து வீசுது
எங்கே இருக்கேன்னு
எம்மனசு துடிக்குது.
*
தூறல் மெல்ல போடுது
மழை வேகமாக கொட்டுது
எங்கே இருக்கேன்னு
என் நெஞ்சும் பதறுது.
*
கஷ்டப்பட்டு வராதே
காத்து மழையில் நனையாதே
ஒதுங்கி எங்கும் நிக்காதே
உபத்திரத்தைத் தேடாதே.
*
எங்கே இருக்கேன்னு
செல்போனில் சொல்லிடு
ஸ்கூட்டரிலே வருகிறேன்
கொஞ்ச நேரம் காத்திரு.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (3-Jul-15, 3:08 pm)
Tanglish : kaathiru
பார்வை : 182

மேலே