காதல் போதும் நமக்கு

உன் கரம் பிடிக்கவே
என் உயிர் ஏங்குதடி
உன் கன்ன குழி சிரிப்பினிலே
என் வாழ்கையும் இருக்குதடி
ஜாதி சமயம் வேண்டாம் நமக்கு
காதல் போதும் என்றும் நமக்கு
60 வயதினிலும் உன் மடி உறங்க
ஆசை
எனக்கு நிறைவில்லா வாழ்க்கை
அது நீ இல்லாத வாழ்க்கை மட்டுமே
அவைகள் வேண்டாம் எனக்கும் உனக்கும்
வாழ்க்கை என்பது நாட்கள் நிறைந்தவை அல்ல
நல்ல நினைவுகள் நிறைந்தது தான்
ஜாதிகள் சமயங்கள் வேண்டாம் நமக்கு
காதலும் அன்பும் போதும் நமக்கு