நெஞ்சே ! நெஞ்சே !
நெஞ்சே ! நெஞ்சே !
உன் நினைவோடு பேசுகிறேன்
கண்ணே ! கண்ணே !
என் விழியோடு சாயுகிறாய்
நீதானே என் வாழ்க்கை கீதம்
நாள்தோறும் நானும் பாடுவேன்
நீதானே என் உயிரின் தேடல்
நீயின்றி நானும் இல்லையே
(நெஞ்சே ! நெஞ்சே !.....)
பெண்ணோடு பேசும் நிமிடங்கள் கொஞ்சம்
உன்னாலே தானே பூர்க்கின்றது
என்னோடு கெஞ்சும் நிமிடங்கள் தஞ்சம்
உன்னாலே தானே இசைக்கின்றது
உந்தன் நிழலுக்கு கடிதங்கள் போட்டேன்
எந்தன் பின்னே வருகிறதே
எந்தன் காற்றும் உன்னை தொட்டால்
எந்தன் முகவரி ஆகிடுமே
நெஞ்சம் இரண்டு என்றாலும் -எம்
இதயம் மட்டும் ஒன்றல்லோ !
இமைகள் மூடும் தருணத்திலும் -எம்
கனவுகள் இரண்டும் ஒன்றல்லோ !
(நெஞ்சே ! நெஞ்சே !.....)
உனக்கும் எனக்கும் காதல் நேரம்
இனிதாய் பிறந்து சுகம் பெறுதே
நீயும் நானும் போகும் பாதை
காதல் கவிதை சொல்லிடுமே
உன்னோடு பேசும் நினைவுகள் யாவும்
சொர்க்கத்தில் தானே முளைக்கிறதே
உன்னோடு சேரும் நாளும் வந்தால்
உயிரில் உன்பெயர் சிரித்திடுமே
கடவுள் பூமிக்கு வந்தாலும் -எம்
காதல் தானே முதலிடமே
உலகத்தின் அதிசயம் எழாயினும் -உன்
அழகினை கண்டு தோற்றிடுமே
(நெஞ்சே ! நெஞ்சே !.....)