அய்யோ சத்துணவு போச்சே

என்ன அண்ணே, இன்னிக்கு ஜெயிலுக்குள்ள வந்த உடனே எல்லார்க்கும் இனிப்புத் தர்றீங்க?

டேய் நீ மொதத் தடவ ஜெயிலுக்கு வந்தவன் போல இருக்கு. அதுதான்டா என்ன உனக்குத் தெரீல. நான் இன்னிக்கு 100வது தடவ ஜெயிலுக்கு வந்திருக்கேன்டா. அதுக்குத்தான்டா இனிப்பு..

சரிண்ணே. எதுக்கண்ணே அடிக்கடி ஜெயிலுக்கு வர்றீங்க?

இங்க தர்ற களி உருண்டை கொண்டக் கடலை வேர்க்கடலையெல்லாம் சாப்பிடத்தான்டா நான் சின்ன சின்னக குற்றம் ஏதாவது பண்ணி நான் அடிக்கடி ஜெயிலுக்கு வர்றேன்டா.

அண்ணே இப்ப அதெல்லாம் நிறுத்திட்டு மூணு வேளையும் அரிசிக் கஞ்சியா ஊத்தி கைதிங்கள வத்திப் போக வைக்கறாங்க.

அய்யயயோ சத்துணவு போச்சா. இனி ஒரு மாசத்துக்குப் பல்லக் கடிச்சிட்டு கஞ்சியக் குடிச்சிட்டு வெளியேறி குற்றம் புரிமா இருந்து வீட்லயே சத்துணவா சாப்பிட வேண்டியது தான்.

எழுதியவர் : மலர் (5-Jul-15, 8:43 pm)
பார்வை : 259

சிறந்த நகைச்சுவைகள்

மேலே