விவரம்
இப்போதெல்லாம் அம்மாக்கள்
நிலாவைக்காட்டிச் சோறூட்டுவதில்லை
நிலவில் கால் மிதித்து விட்டதால்-
இப்போதெல்லாம்
அம்மாக்கள் குழந்தைகளிடம்
பூச்சாண்டி வருகிறானென்று
சொல்லி சோ றூட்டுவதில்லை
அயல் கிரக வாசி அதோவருகிறான் ....
இரண்டு துண்டங்களாகவா இருக்கிறாளென்று
எதிர்கேள்வி கேட்பதால்
இப்போதெல்லாம் கவிஞர்கள்
இல்லாத இடுப்பழகியென்று பாடுவதில்லை ...
.நானும்தான்-
பையன்கள் விவரமாகிப் போனதால்
என்னப்பா என்னிடம் சொல்லியதுபோல்
வானத்து மேகங்களை
வான வியாபாரி விற்கும்
பஞ்சு மிட்டாயென்று சொல்லி
மாட்டிக்க மாட்டேன்.