நெஞ்சில் ஈரம்

நெஞ்சில் ஈரமில்லா
மனிதர்களா நாங்கள் - இல்லை
வயிற்று பசிக்காக வளைந்து கொடுக்கும்
மனிதர்கள் நாங்கள்...........

என் வீட்டில் அடுபெரிய
திசை நான்கும்
என் கால்கள் செல்லும் போது
இடையே வரும் வறியவனின்
கையில் இடும் ஒரு நாணயம்
மட்டுமே என் நெஞ்சின் ஈரம்.............

அலுவலக வேலைக்கு
அரை நொடி தாமதம் என்று
சிந்தனை பறக்க நான் செல்லும் போது
சிறு விபத்தில் காயம் அடைந்தவனுக்காக
என் கால்கள் ஒரு நொடி நிற்பதுதான்
என் நெஞ்சின் ஈரம்............

இப்படி
வறியவனுக்கு வாழ்வளிக்க முடியாமல்
காயமடைந்தவனை காப்பாற்ற முடியாமல்
நான் வாழவதால் -என்
நெஞ்சில் ஈரம் இல்லாமல் இல்லை.....
வாழ்வின் கட்டமைப்பில் தனக்காக
வாழும் சூழலில் என்னை போல் பலர்.......... சாதாரண மனிதர்கள் ..........

என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்

எழுதியவர் : (8-Jul-15, 3:46 pm)
Tanglish : nenchil eeram
பார்வை : 115

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே