மென்தமிழ் வன்தமிழ் நாளை உண்டென்று சொல்லடி பாப்பா

மென்தமிழ் (Software Tamil/Thamizh)
வன்தமிழ் (Hardware Tamil/Thamizh)
நாளை உண்டென்று
சொல்லடி பாப்பா!...

இயல்தமிழ்
இசைத்தமிழ்
நாடகத்தமிழ்
நாளை இல்லென்று
பாடடி பாப்பா!...

பாடிக்களித்தான்
பாரதி!
"யான் அறிந்த
மொழிகளிலே
தமிழ் மொழி போல்
இனிதாவது
எங்கும் காணேன்."
ஆம் பாரதி
நானும் காணேன்...
தமிழ் மொழியையே காணேன்...
தேடிக்கொண்டிருக்கிறேன்..

தமிழன்
தமிழில்
வாயை
திறந்தால்
தென்பட்டு விடும்...

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (8-Jul-15, 9:54 pm)
பார்வை : 195

மேலே