சிறுமியின் குறும்பு

கோவிலில் கட்டும் காவடி
காணும் ஆவலில் நான் ஓடி
கண்டேன் இருகழுதை வர பாய்ந்தோடி..
அரண்டதோ என்இதயம் ஆத்தாடி
தெருவின் பக்கசுவரை நான் தேடி
பதுங்கினேன் பயத்தில்கண்கள் இருண்டபடி..
யார் கொடுத்த அடியோ! வாங்கியபடி
வந்து ஓடியதே தலைக்குமேல் பாய்ந்தபடி
கழுதையால் வாங்காத அடி, கடி
பதுங்கியதால் வந்ததே குருதி சிதறியபடி..
கழுதைமேல் காட்டவியலாத கோபமடி
போட்டேனே அழுதுசத்தம் வீடு அதிரும்படி
சிரிக்காதே தோழி! அடி போடி..
இளமையில் இதெல்லாம் சகஜம் தாண்டி..

எழுதியவர் : deeku (9-Jul-15, 1:09 pm)
Tanglish : sirumiyin kurumbu
பார்வை : 156

மேலே