இலங்கை
கூடு கலைந்த பறவைகள் -போல்
தாய் நாடு பிரிந்த நண்பர்களே
தாய் தேசமதை காண மனமதுதவிக்கிறதோ- உம்
மனக்கண் கொண்டு பார்த்தல்
மாணிக்கபுரி அதுவோ..
நாற்புறமும் மதில்கள்
பளிங்கினால் கட்டவில்லை
பாறாங் கற்களால் கட்டவில்லை
நாற்திசை மணலையும்
கடல் அலைகள் முத்தமிடும்
அழகிய தீவு அதுவே இலங்கை..
பச்சை பசும் வயல்வெளிகள்
பாசமுள்ள மனிதர்கள் பலர்
சோகம் நிறைந்த முகத்தினர் சிலர்
சொல்ல முடியாத காட்சிகள் சில
உடைந்த கட்டிடங்கள்
தரை சரிந்த மரங்கள்
புதர் வளர்ந்த ஊர்கள்
புதிதாய் எழும்பும் கட்டிடங்கள்..
காண மகிழதோ இருப்பினும்
மனதிலோர் சோகம்
மடிந்த பல்லாயிரம் உறவுகளை நினைத்தே

