என்னை விட்ட உயிர்

எத்தனை நாளாய்
சுமந்திருந்தாய் - வலியை
உள்ளுள் வைத்தே அழுதிருந்தாய்!!

இப்பொழுது
நான் உன்னை பார்க்க
வந்திருந்தேன்-நீயோ
கண்கள் மூடி படுத்திருந்தாய்!!

சாபம் பெற்ற பிறவி நானோ! - ஜயோ!!
உனக்கு துன்பம் தந்த
சைத்தான் தானோ!!

இத்தனை தந்தும் என்னை
மட்டும் இன்னும் நீ மறக்கவில்லை!
உன்னுடன் பேசிய நொடியிலே
புரிந்துகொண்டேன் பாசமும்
குறைந்ததில்லை!!

என்னை மட்டும் பார்த்திருந்த
அழகு மயில் நீயடா!! - உன்னை
விட்டு கயவனுக்கு வாழ்க்கை
தந்தது தவறடா!!!


காலம் போட்ட சங்கிலியில் மாட்டிக்
கொண்டே தவித்திருந்தேன்!!
உனதுருவம் தூரம் போகப்போக
கதறிக் கொண்டே காலம்
கடந்திருந்தேன்!!

உன்னை பிடித்த சாபம் மீண்டும்
ஒரு சாபம் பெற்றிருக்க,
என் குழந்தை நீயும் பார்த்திருந்தாய்
கண்கள் முழுதும் நீர் வடிய!!

உனக்கு துன்பம் தந்ததால்
என்னையும் பிள்ளையும்
திட்டியதுண்டு! - சில நேரம்
உன்னை மறந்தே இன்பமாய்
வாழ்ந்த நாட்களும் உண்டு!!

எவனோ ஒருவன் கதவு தட்ட நீதான்
என்றே திறந்திருந்தேன்! - வந்த உன்
நண்பன் சொன்னான் மரணம் உன்னை தழுவியிருந்ததாம்!!

கதறிக் கதறி அழுதுக் கொண்டே
உன் வீடு நோக்கி நடந்திருந்தேன்!
நான் அடையும் முன்னே உன்னை
எடுத்து சில பேர் கல்லறை
நோக்கி நடந்திருந்தார்!!

எனக்காய் மட்டும் வாழ்ந்த உருவம்
மண்ணின் அடியில் புதைகிறதே!!
ஜயோ!!
உன் முகம் கூட பார்க்காமல்
என் உயிரும் மெதுவாய் கரைகிறதே!


என்ன செய்வது தெரியாமல்!?
தினமும் உன் கல்லறை முன் புலம்புகின்றேன் இவ்வாறு!!!

எத்தனை நாளாய்
சுமந்திருந்தாய் - வலியை
உள்ளுள் வைத்தே அழுதிருந்தாய்!!

எழுதியவர் : இஜாஸ் (14-Jul-15, 3:14 pm)
Tanglish : ennai vitta uyir
பார்வை : 101

மேலே