கூத்துக்கலை

விழிப்புணர்வு பாடல்
கூத்துக்கலை

ஆண்:
நவாப் பழ கலரழகி
நாகரீகம் தெரிஞ்ச அழகி
கஞ்சா ஏத்தும் கருப்பழகி
என் பேரழகி

பெண்:
ஊரு விட்டு உறவு விட்டு
உன்ன நம்பி வந்தேன் - ஏ மாமா
கானா பாட்டு பாடி கூட
கரச்சு புட்ட என் மனச

உன்ன நம்பி வந்ததற்கு
தெருக்கூத்து கூட ஆடுறேனே
நாலுபேரு பேசுறது
நாக்கசப்பா ஆகுதயா
வியர்வை சிந்தி பொழச்சுக்கலாம்
வா மாமா போயிடலாம்

ஆண்:
கூத்து ஒரு கலை தாயி
கூவிக்கிட்டே ஆடு தாயி
நம்ம மனசு வலிச்சாலும்
நாலு மனசு குளுரும் தாயி
வியர்வை சிந்தி பொழச்சாலும்
இந்த புண்ணியம் கிடைக்காது

எந்த கலை அழிஞ்சாலும்
இந்த கலை அழியாது
விதி வந்து போனாலும்
மதி கொண்டு ஆடும் கலை

அழிவற்றவன் ஆடும் கலை
அறிவற்றவன் அழிக்கும் கலை
நாம அழிஞ்சு போனாலும்
நம்மை பேசும் கூத்துக்கலை

நம்ம கூத்துக்கலை ....

எழுதியவர் : Hma (15-Jul-15, 4:27 pm)
பார்வை : 91

மேலே