இரவின் இன்னிசை
கருணையின் வடிவாய்
கார்மேகத்தின் உருவாய்
கலைகளின் சிற்பியாய்
பல கலைஞர்களின் சிற்பமாய்
விளங்கும் அன்னையர்களுக்கு தெரியும்
இந்த இரவின் இன்னிசை!
ஆசைகளின் இசையை மனதிலும்
ஆராதவடுவை உடலிலும் சுமக்கும்
தந்தையர்களுக்கு புரியும்
இந்த இரவின் இன்னிசை!
மண்ணோடும் மழையோடும்
உறவாடி இழைப்பார துடிக்கும்
மழலையின் பாதங்கள் அறியும்
இந்த இரவின் இன்னிசை!
விழியோடு விளையாட
ஏங்கிநிற்கும் இமைகளுக்கு தெரியும்
இந்த இரவின் இன்னிசை !
எண்ணங்களுக்கெல்லாம் உயிரூட்டி
ஏக்கங்களையெல்லாம் உறையவைக்கும்
இந்த இரவே ஒரு இசைதான் ........................