மாறுகிறதா பெண்மை

அஞ்சிவாழும் நிலைபோய்
ஆளும்நிலை வந்ததிங்கே !
கெஞ்சிவாழ்ந்த நிலைபோய்
கிரீடம்சூட்டி மகிழ்திங்கே !
நெஞ்சிலீரம் நித்தம்வைத்து
நினைவில்உரம் வைத்ததெங்கே ?
தஞ்சம்அவள் என்றதுமே
தாவியணைத்த கைகளெங்கே ?
இயற்கையன்னை என்றுசொல்லி
இன்பம்காணும் நிலையிங்கே !
உயர்ந்தவாழ் கைதந்த
உன்னதமன உணர்வெங்கே ?
அயர்ச்சிஎன்ப தவளுக்கில்லை
அன்புஒன்றே உயர்ந்தநிலை
முயற்சிஎனும் மூலமந்திரம்
மூச்சைக்கொண் டுவாழ்ந்ததிங்கே !
வாழ்க்கையெனும் வட்டத்தை
வாகாய்ச்சுற்றி வைத்திடுவாள்
உலகத்தினோட்ட த்தைத்தன்
கைகள்கொண் டேஅசைத்திடுவாள்
பழமையெனும் மகாபாரதத்தை (காவியத்தை)
பாசம்கொண்டே காத்தவள்தான் - அதை
பழமையென்று விட்டெறிந்து
புதுவாழ்க்கைதேடி ஓடுகிறாள் .....
ஆடைதனிலே முன்னேற்றம்- மன
அச்சம்கொண்ட போராட்டம்
நடைதனிலே ஒய்யாராம்
நளினமிங்கே திண்டாட்டம்
அடக்கம்கொண்ட வாழ்வினிலே
அகந்தைகூடி வருவதினால்
படிப்பென்பது பெண்மைக்கு
பகட்டுவாழ்வைத் தந்திடுதோ?
கற்றறிந்த பெண்களெல்லாம்
கழனியைத்திருத் தம்செயதனரே
உற்றவழி சொல்லியிங்கே
உயரவைமட் டும்காட்டினரே
தற்பெருமை அவர்கட்கில்லை
தலைக்கனமோ சிறிதுமில்லை
பெற்றபிள்ளை எனத்தானே
புவியைபேணி காத்தனரே
உலகம்மென்றும் உன்கையில் - எங்கள்
உணர்வும்மென்றும் உன்கையில்
நிலைமைவேறாய் இருப்பதினால்
நிதானம்இன்றி தவிக்கிறோம்
தலைமைநீதான் எங்களுக்கு - என்றும்
தஞ்சம்நீதான் எங்களுக்கு
நிலைமைஇதுதான் உலகிற்க்கு
நினைவில்கொண்டால் உயர்வதுவே .....
குரு நிர்மல் ராஜ்