விடுமுறை - 12330

பகலவனே உனக்கு விடுமுறை தருகிறேன்
பனித்துளிகளை இன்றேனும் கரைக்காதே.....!! என்

நினைவுக் கயிற்றிலே அதை எண்ணிக் கோர்த்து - மன
நிம்மதிக்கு ஒரு முத்துமாலை செய்ய வேண்டும்...!!

ஓய்வெடுக்க வந்ததே இந்த ஞாயிறு - மனதை
ஒருநிலை படுத்தவேண்டும் நீ போய் விடு....!!

வெளிச்சம் தர மனசிருக்கு விளைபயிராய் கனவிருக்கு
விளங்கிக் கொள்ள வாழ்விருக்கு விரிவான மனமிருக்கு.....!! இன்று

பணித் தொடக்கம் எட்டு மணி அல்ல - உலகம் முழுக்க
பவனி வருவேன் ஹையா இன்று விடுமுறை ஞாயிறு.....!!

எழுதியவர் : ஹரி (19-Jul-15, 1:44 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 89

மேலே