சிவ பிரம்ம சங்கமம்

என்னை
இயக்கியப் பௌர்ணமியே!...
காதல் மேலிடும்போதெல்லாம்
கண்களில்
வந்தோர் உண்டு
கண்டதால் சிலரைக்
காமம்
மேலிட்டதும் உண்டு
இதயத்திற்குத் திரையிட்டு
வெளியே வைத்திருந்தேன்
எல்லோரையும்...
விழியில் நுழைந்தால்
வழியில்லை என்று
எப்படிக் கண்டு கொண்டாய் நீ?!
சுவாசத்தில் நுழைந்து
உன்னையே நிரப்பிக் கொண்டாய்
இடமேயின்றி...இதயம் முழுவதும்!
என்
உயிரின் ரகசியம்
உடைபட்டுப் போனது.
உன்
விழியில் விழுந்து
இதழில் நிறைந்து
என் இதழில்
உன் இதழ்கள்
பதிந்த போது
உயிர் மொத்தமாய்
உன்னிடம் உள்ளதாய்
என் உயிரின் ரகசியம்
உடைபட்டுப் போனது.
சத்தம் இல்லாமல்
வெடிக்கச் செய்தவளே!
முத்தம் என்ன...
சாகும் வரைக்கும்
துடிக்கச் செய்தவளே!
சடலத்தை
தீ ஒருநாள்
தின்று தீர்க்கும்
விழிகளால் துளைத்தாய்
சுடுமூச்சால் எரித்தாய்
இரண்டும் முடிந்தபின்பு
எதை வந்து
அந்தத் தீ
என்ன செய்யப் போகிறது?!

எழுதியவர் : கவிஞர்.செம்பை.முருகானந்த (20-Jul-15, 4:28 pm)
பார்வை : 96

மேலே