அமரர்ஊர்தி

சுவாசிக்க முடியாதவனுக்கு..
ஜன்னல் வைத்த வண்டி..
பிணம் பயணிக்கிறது..!

இறந்தபின் எங்கே போகிறோம்..?
பிணம் பயணிக்கிறது..!?

நில், கவனி ,செல்.!
பிணம் பயணிக்கிறது.!

நகரும் பிணத்துக்கு..
வழி விடுகின்றன..நாளைய பிணங்கள்..!
பிணம் பயணிக்கிறது..!

நடத்துனர் இல்லாத வண்டியில்..
டிக்கெட் வாங்கிக்கொண்டு ..
பிணம் பயணிக்கிறது..!

இறுதியில்..
இறந்த களைப்பில்..
பிணம்..மணல் போர்த்திக்கொள்கிறது..!
அல்லது..
தணல் போர்த்திக்கொள்கிறது..!

மீண்டும்..அதே வண்டியில் ..
மற்றொரு ..
பிணம் பயணிக்கிறது..!

இவ்வாறே..
எங்கேயும்,
எப்போதும்,
பிணமும் பயணித்துக்கொண்டேயிருக்கிறது.!

எழுதியவர் : நிலாகண்ணன் (20-Jul-15, 8:00 pm)
பார்வை : 114

மேலே