காதலின் முதல் இரு எதிரி

கோபித்தேன் அவனுடன்
பேசாதே எனக் கூறி ,
தலை சிலுப்பி நின்றேன்...

சாப்பிடாது பட்டனிகிடக்க,
போய் சாப்பிடு செல்லம்,
என்று அவனும் கெஞ்சினான்...

அவன் வார்த்தைகள்
செவியினில் எட்டதவாறே
எட்ட நின்று முறைத்தேன்...

வேதனை முகத்தினில் மண்ட
அவனும் வேறேதும் சொல்லது,
மௌனமாய் முகம் திருப்பினான்...

என்னவனை கடுப்பேற்றவே
அவன் வார்த்தைகளை ஒதுக்கி,
நான் வேடிக்கை பார்த்தேன்...

அவன் கண்களில் கண்ட வலி
என்னை கட்டிபோட,
அவன் வார்தைக்கிணங்கினேன்..

அவன் பார்வைக்கு எட்டாது
மறைந்து நின்றே,
நானும் சாப்பிட்டுவிட்டேன்...

இறுதி கவளம் - என்
தொண்டைவழி இறங்க,
ஓர் உண்மை உணர்ந்தேன்,,,

சுய கௌரவமும் சுய நலமும்
காதலுக்கு - முதல் இரு
எதிரிகள் என்பதை!

எழுதியவர் : கவிப் பிரியை - Shah (20-Jul-15, 8:24 pm)
பார்வை : 481

மேலே