பெண்நதி

எங்கோ ஒரு இடத்தில்
அந்த அருவி
அமைதி காண்கிறது
மரணமாய் கூட இருக்கலாம்

பாவம் ஓயாது விழுந்து
காயம் காணும் தன்
தேகம் கொண்டு
பருகுபவனுக்கு தாக்கம்
தணிக்கிறது

விழுவதற்காய் பிறந்தோம்
என நிச்சயம்
உணர்ந்திருக்காது
பாதைகளின்
பலவந்தத்தால்
விழுந்து தவிக்கிறது

எந்த ஒரு அருவியும்
நோக்கத்தோடு
முதல்முறை விழுவதில்லை
ஆனால் விழுந்த பின்
பழகிவிடுகிறது

தன் பயணங்களில்
எத்தனையோ
பாறைகளின் மோதல்களால்
காயமடைந்து
இறுதியில் அந்த பெண்நதி
மரண சமுத்திரத்தில்
கலக்கிறது

நியாயப் படுத்த வில்லை
அவள் மட்டும்
நியாயம் கெடுக்க வில்லை
புரிந்தோர் இனியேனும்
புரிந்தால் போதும்

எழுதியவர் : கவியரசன் (21-Jul-15, 10:42 am)
பார்வை : 59

மேலே