மின்பொறியாளனின் காதல்

ஃபாரடே பார்க்க தவறிவிட்டான்
மின்காந்த தூண்டலை...
உன் சிரிப்பையும் அதனால்
தூண்டப்பட்ட என் பெருமூச்சையும்...

கூலூமின் நேர் எதிர் மின்னூட்டங்களின் கவர்ச்சிவிதிக்கு நீயும் நானுமே உதாரணமாயினோம்...

ஓம் விதி புறக்கணிக்கப்பட்டது
மின்தடை இல்லாத மின்கடத்தி ஆனேன்...
காதல் மின்னூட்டங்களை கடத்துவதால்...

மின்னியல் விதிகளில் உன்னையும் உன் காதலையும் மட்டும் காணும்
மின்பொறியாளன் ஆகிவிட்டேன்...

எழுதியவர் : நாகலட்சுமி (23-Jul-15, 8:43 pm)
பார்வை : 64

மேலே