எந்திர வளர்ப்பு -ரகு

நூலில்
தூக்கு செய்து
கதவிடுக்கில் சிக்கிய
பல்லியின்
வாலில் கோர்த்திழுக்கத்
துண்டான வால்விட்டுத்
துடித்துத் தப்பியது
பல்லி
எந்திர மணித்துளிகள்
உத்திரவிடும்
தருணமெல்லாம்
திரும்பிப் பார்த்து
குழந்தை பத்திரமாக
விளையாடுவதில்
திருப்தி கொள்கிறோம்
நாம்.......!!

எழுதியவர் : சுஜய் ரகு (27-Jul-15, 12:04 pm)
பார்வை : 70

மேலே