வாக்குறுதி

இன்பத்திலும் துன்பத்திலும் பங்கெடுப்பது
வாக்குறுதி திருமணத்தில்

உண்மையைத் தவிர வேறில்லை
நீதிக்கு முன்னால்

உயிர்பிரியா நண்பனாக இருப்பேன்
நண்பன் முன்னே

ஆட்சிக்கு வந்தால் கேட்டதெல்லாம்
செய்து தருவேன் அரசியல்வாதி

இரகசியங்களைக் காப்பேன்
மெய்க் காப்பாளரின் வாக்குறுதி

நாட்டை காவல் செய்யும் காவலதிகாரிகள்
நேர்மையுடனும் நீதியுடனும் மக்களைக் காப்போம்

மக்களின் உயிர் காக்கும் மருத்துவர் எம் நயம் பாராது
மக்களின் நலன் காப்போம்

பள்ளி சிறுவர்களின் ஆசிரியர்கள்
இயன்றவரை மாணவர்களை உருவாக்குவோம்

சத்தியத்துக்கு புறம்பான எக்காரியத்தையும்
முன் வைக்க மாட்டோம் துறவிகள்

நாட்டையும் நாட்டு மக்களையும் குறையில்லா
வாழ்விற்கு இட்டு செல்வோம் நாட்டின் தலைவர்

ஒவ்வொரு பொறுப்பில் உள்ளவர்களும் சொல்வதெல்லாம் உண்மை
கொடுப்பதெல்லாம் வாக்குறுதி

ஆனால் செய்வதெல்லாம் முரண் பாடானவை
வாக்குறுதி எதற்கு வசனங்கள் எதற்கு

எந்தத் துறையிலும் வாழ்க்கையிலும்
வாக்குறுதிகள் சும்மா பேருக்குத் தான்

எல்லாமே கண்துடைப்புகளே
வார்த்தைகள் உள்ளத்தில் இருந்து வரவேண்டும்
அதுதான் நிலையானது

வாயில் இருந்து வரும் வார்த்தைகள் வெளி வேஷம்
வாக்குறுதி எல்லாமே போலிதான்

நம்ப முடியவில்லை வாக்குறுதிகளை
நம்ப முடிவதில்லை

எழுதியவர் : பாத்திமா மலர் (27-Jul-15, 7:43 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : vakkuruthi
பார்வை : 452

மேலே