கல்விக்கு கண் கொடுத்த கடவுள்

கல்விக்கு கண் கொடுத்த கடவுளே!
பள்ளிக்கு ஒளி கொடுத்த விளக்கே!

கார்முகில் நிறத்தோடு
பார் போற்ற வாழ்ந்தாயே!
பாமர மக்களுக்கும்
படிப்பதனை கொடுத்தாயே!

எட்டாக் கல்வியை
ஏழைகளும் பெற்றிட
பட்டி தொட்டியெங்கும்
பாடசாலை திறந்தாயே!

மாணாக்கர் பசியாறி கற்றிட
மதிய உணவும் கொடுத்து
பாமரனையும் கல்வி கற்றிட
பள்ளிக்கு அழைத்தாயே!

படிக்காத மேதையே! - இன்று
படிப்பவர் அனைவரும் உன்னாலே!

எழுதியவர் : (28-Jul-15, 7:25 pm)
சேர்த்தது : தங்கமணிகண்டன்
பார்வை : 112

மேலே