தவறும் நேரம்

கண்முன் கடந்து போகும்
காலைப் பேருந்து...

ஓடிவந்து கையிலெடுக்கையில்
முடிந்துபோகும் அழைப்போசை ..!

மிகப்பெரும் அரங்கத்தில்
மறந்து தொலைக்கும் சிலசொற்கள்..!

தேர்வுமுடிவைத் தேடும்
படிக்காதவனின் கண்கள் ...

தீக்குளித்தவன் உடலில்
தீயின் நெருக்கமுணரும் நேரம்..

போராடித்தோற்ற பெண்ணை
ஆடவனொருவன் தொடமுயலும் நேரம் ...

எதிர்வரும் வாகனத்தோடு
போகுமுயிர் என்றறியும் நொடி ..

............................................................
.............................................................

காலமே ! -நீ நின்று
போனால் தான் என்ன ...!?

எழுதியவர் : நிலாநேசி (29-Jul-15, 12:20 pm)
சேர்த்தது : நிலாநேசி
Tanglish : nun manithuli
பார்வை : 276

மேலே